ரியல் எஸ்டேட் உரிமையாளரை தாக்கி நகை பறிப்பு

ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

போரூர்:

அசோக் நகர் 7-வது அவின்யூவைச் சேர்ந்தவர் பாலாஜி. ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணி அளவில் ஆன்லைன் நிறுவனம் மூலம் உணவு ஆர்டர் செய்தார். டெலிவரி செய்வதற்காக ராஜேஷ்கண்ணா என்கிற ஊழியர் சென்றார். பாலாஜியிடம் உணவு கொடுத்த போது இவ்வளவு நேரம் தாமதமாக ஏன் வந்தாய் என்று கேட்டு பாலாஜி ராஜேசை திட்டினார். ரியல் எஸ்டேட் அதிபரின் மேலாளர் ஜெயராஜ் திடீரென ராஜேசை கன்னத்தில் அடித்தார்.

இதையடுத்து அங்கு வந்த 3 பேர் பாலாஜியை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அசோக் நகர் போலீசார் ராஜேஷ், அவரது தந்தை தனசேகரன் மற்றும் டெலிவரி ஊழியர்கள் சீனிவாசன், மதியழகன், ஜெயசூர்யா ஆகிய 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com