முதல் 3 மாதத்தில் ரவிசாஸ்திரி ரூ.1.2 கோடி சம்பளம் பெற்றார்

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கடந்த 3 மாதத்தில் ரூ.1.2 கோடி சம்பளமாக பெற்று உள்ளார். இதை கிரிக்கெட் வாரியம் தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது.
முதல் 3 மாதத்தில் ரவிசாஸ்திரி ரூ.1.2 கோடி சம்பளம் பெற்றார்
Published on

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே இந்திய அணிக்கு இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

பயிற்சியாளர் பதவியில் ரவிசாஸ்திரி கடந்த 3 மாதத்தில் ரூ.1.2 கோடி சம்பளமாக பெற்று உள்ளார். இதை கிரிக்கெட் வாரியம் தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது.

ஜூலை 18-ந்தேதி முதல் அக்டோபர் 18-ந்தேதி வரை அவருக்கு 1 கோடியே 20 லட்சத்து 87 ஆயிரத்து 187 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே விளையாடிய சர்வதேச போட்டிகள் மூலம் கிடைத்த மொத்த வருவாயில் பங்காக டோனிக்கு ரூ.57.88 லட்சம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதே போல உள்ளூர் போட்டிகளை நடத்திய தற்காக டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு பணம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com