ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
Published on

வாலாஜா:

ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கே.கே.நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராணிப்பேட்டை சோளிங்கர் செல்லும் சாலையில் இன்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சோளிங்கர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com