முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி மரணம் - ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி நேரில் அஞ்சலி

டெல்லியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடலுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அருண் ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார்
அருண் ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார்
Published on

புதுடெல்லி:

முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

அருண் ஜெட்லி மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்த அருண் ஜெட்லியின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அருண் ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com