ஜேஇஇ முதன்மை தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அமைச்சர்

ஜேஇஇ முதன்மை தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும், அடுத்த ஆண்டு நான்கு முறை நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
Published on

2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு நான்கு முறை நடைபெறும். தேர்வுகள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும். முதல் தேர்வு பிப்ரவரி 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவு தேர்வு முடிந்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் வெளியிடப்படும்.

புதிய கல்விக் கொள்கையின்படி, ஜேஇஇ முதன்மைத் தேர்வு 13 மொழிகிளல் நடத்தப்படும். கேள்வித்தாள் இந்தி, ஆங்கிலம், அசாம், பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது மொழிகளில் அச்சிடப்படும்.

தேசிய தேர்வு முகமை 90 கேள்விகள் தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதில் தேர்வு எழுதுபவர்கள் 75-க்கு பதில் அளிக்க வேண்டும். 15-ஐ ஆப்சனில் விட்டுவிடலாம். தவறான கேள்விக்கு மதிப்பெண் மைனஸ் செய்யப்படாது. அதிக மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்படும்’’ என அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com