ராமநாதபுரத்தில் வழிப்பறி வழக்கில் கைதானவர் மர்மமமான முறையில் இறந்தார்

ராமநாதபுரத்தில் வழிப்பறி வழக்கில் கைதானவர் மர்மமமான முறையில் இறந்தார். போலீசார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் வழிப்பறி வழக்கில் கைதானவர் மர்மமமான முறையில் இறந்தார்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள மாயாகுளத்தை சேர்ந்தவர் காஜா நஜ்முதீன் மகன் சேக் அலாவுதீன் (வயது 28). இவர் உள்பட அதே பகுதியை சேர்ந்த சாகுல் அமீது, பூமாரி ஆகியோரை வழிப்பறி வழக்கில் ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்தார்.

பின்னர் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது சேக் அலாவுதீன் மர்மமான முறையில் இறந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் சேக் அலாவுதீன் தப்பிக்க முயற்சி செய்து குதித்ததாகவும், இதனால் படுகாயம் அடைந்த அவர், மரணம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேக்அலாவுதீனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து மருத்துவமனை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், பொய்யான வழக்கில் சேக் அலாவுதீனை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவரை தாக்கியதில் இறந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இறந்த சேக் அலாவுதீன் மீது ராமநாதபுரம், சென்னை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 22 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com