மாநிலங்களவை எம்.பி. ரகுநாத் மோஹபத்ரா கொரோனாவால் உயிரிழப்பு

புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநிலங்களை எம்.பி. ரகுநாத் மோஹபத்ரா, இன்று உயிரிழந்தார்.
ரகுநாத் மோஹபத்ரா
ரகுநாத் மோஹபத்ரா
Published on

ஒடிசா மாநிலம் புரியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர், சிற்பி ரகுநாத் மோஹபத்ரா. கடந்த 1943-ம் ஆண்டு பிறந்த இவர், 1975-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும், 2001-ல் பத்ம பூஷன் விருதையும், 2013-ல் பத்ம விபூசன் விருதையும் வென்றவர்.

ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யா. தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com