அதிமுக எம்பிக்கள் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
அதிமுக எம்பிக்கள் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்களும், ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மாநிலங்களவை கூடியதும் அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, பல்வேறு மசோதாக்களும் விவாதங்களும் நிலுவையில் இருப்பதால் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதிமுக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். 

ஆனாலும் எம்பிக்களின் அமளி நீடித்தது. இதையடுத்து முதலில் 15 நிடங்களுக்கும், அதன்பின்னர் மதியம் 12 வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதையடுத்து இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

2 மணிக்கு மாநிலங்களவை கூடியபோது அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இனி நாளை காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடும். #WinterSession #RajyaSabhaAdjourned

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com