சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on: 

சென்னை:

மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 3.30 மணி முதலே கனமழை பெய்து வருகிறது. கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்துவருகிறது.

சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், மீனம்பாக்கம், அசோக்நகர், கோடம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவோரும், வாகன ஓட்டிகளும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். 

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளையும் கனமழை நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com