அரக்கோணம் அருகே ரெயில்வே ஊழியர் எரித்துக் கொலை? போலீசார் விசாரணை

அரக்கோணம் அருகே முட்புதிரில் ரெயில்வே ஊழியர் எரிந்து பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65) ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் இன்று காலை மங்கம்மா பேட்டை பொன்னியம்மன் நகர் மைதானம் அருகே உள்ள முட்புதரில் தீயில் எரிந்து உடல் கருகி இறந்து கிடந்தார்.

அவரின் அருகில் அவருடைய செல்போன் வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இறந்து கிடந்த செல்வராஜ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மர்மநபர்கள் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் தீயில் கருகி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது. செல்வராஜிக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com