மதுரை அருகே அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே பெண் ஊழியர் பலி

மதுரை அருகே அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே பெண் ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரை அடுத்துள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் விஜயலட்சுமி (வயது 32). மாற்றுத்திறனாளியான இவர் மதுரை ரெயில் நிலையத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். தினமும் வேலைக்கு அரசு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து விட்டு விஜயலட்சுமி அரசு பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். கப்பலூர் பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்க முற்பட்டபோது திடீரென டிரைவர் பஸ்சை இயக்கி உள்ளார். இதில் கால் தடுமாறி கீழே விழுந்த விஜயலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்தப் பகுதியினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com