

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
2 முறை சாம்பியனும், உலகின் 4-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் 16-வது வரிசையில் இருக்கும் ஜைல்ஸ் முல்லரை (லக்சம்பர்க்) எதிர்கொண்டார்.
முல்லரின் அதிரடியான சர்வீஸ்களால் நடால் நிலை குலைந்தார். இதனால் அவர் 3-6, 4-6 என்ற கணக்கில் முதல் 2 செட்டை இழந்தார். அதன்பிறகு ஆட்டத்தில் வேகம் இருந்தது. இதனால் 6-3, 6-4 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களை வென்றார். இருவரும் தலா 2 செட்களை வென்றதால் 5-வது செட் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் நடால் 13-15 என்ற கணக்கில் போராடி தோற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நடால் சமீபத்தில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 10-வது முறையாக வென்று சாதனை படைத்து இருந்தார்.
முல்லர் 6-3, 6-4, 3-6, 4-6, 15-13 என்ற கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்சிலாம் காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 4 மணி 45 நிமிட நேரம் நடந்தது.
மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரும், 7 முறை சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-2, 6-4 என்ற கணக்கில் டிமிட்ரோவை (பல்கேரியா) எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிஇறுதியில் அவர் 6-ம் நிலை வீரர் ரோனிக்கை (கனடா) சந்திக்கிறார்.
இதேபோல உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), சிலிச் (குரோஷியா) ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினார்கள். இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் மோதும் 4-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் மோதும் வீராங்கனைகள் விவரம்:-