அமெரிக்கா விலகியதற்கு கவலைப்படாதீர்கள்: டிரம்ப் அறிவிப்புக்கு புதின் பதிலடி

பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விலகியதற்கு கவலைப்படாதீர்கள்: டிரம்ப் அறிவிப்புக்கு புதின் பதிலடி
Published on

வாஷிங்டன்:

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். 

பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பநிலையிலேயே தற்போதைய அதிபர் டிரம்ப் இருந்து வந்தார்.

இதனையடுத்து, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்ததை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்தார். டிரம்பின் இந்த முடிவுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், ‘கவலைப்பட வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று உலக நாடுகளுக்கு தெரிவித்துள்ளார். 

இது குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பேசிய அவர், “பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக 2021-ம் ஆண்டு வரை அமலுக்கு வராது, புவி வெப்பமயமாதலை தடுக்க ஆக்கப்பூர்வமான தீர்வு காண உலக நாடுகளுக்கு கால அவகாசம் இருக்கிறது” என்றார்.

உலக அளவில் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் உற்பத்தி செய்யும், கிரீன் ஹவுஸ் வாயுக்களை வெளியிடும் 5-வது பெரிய நாடாக ரஷ்யா உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com