

பொறியியல் பணி காரணமாக புதுச்சேரிக்கு வந்து சேரும் ரெயில்களும், புதுச்சேரியில் இருந்து புறப்படும் ரெயில்களும் மாற்றம் செய்யப்படுகின்றன.
திருப்பதியில் அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி- புதுவை மெமு விரைவு ரெயில் வரும் 24, 27-ந்தேதிகளில் விழுப்புரம் சந்திப்பு வரை மட்டும் இயக்கப்படும். புதுவையில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்படும்.
புதுவை- சென்னை எழும்பூர் மெமு பயணிகள் ரெயில் வரும் 24, 27-ந் தேதிகளில் புதுவை- விழுப்புரம் சந்திப்புக்கு இடையில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் சந்திப்பிலிருந்து பிற்பகல் 4.30 மணிக்கு இயக்கப்படும்.
தென்னக ரெயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.