தொழில்போட்டியில் இரு தரப்பினர் மோதல்

இதுதொடர்பாக இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இரு தரப்பினரும் தனித்தனியே மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை முத்திரையர்பாளையம் வழுதாவூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹரிதேவ். இவரது மனைவி ராணி. இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகே அதே பகுதியை சேர்ந்த குணவதி என்பவரும் ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.

இருவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. குணவதி மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் ராணி மற்றும் அவரது சம்பந்தி சாந்தி ஆகியோரை கத்தியால் வெட்டியும், கல்லாலும் தாக்கினர்.

இதுபோல் ராணி தரப்பினர் குணவதி மற்றும் அவரது உறவினர் பிரவீன்குமார் ஆகியோரை தாக்கினர்.

இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com