வெள்ளி திருப்பூரில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

வெள்ளி திருப்பூரில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூரில் அண்ணா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை.

இதை கண்டித்தும் உடனடியாக குடிநீர் வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் இன்று காலை 4 ரோடு சென்னம்பட்டி ரோட்டில் குடிநீர் கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வெள்ளி திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் அம்மா பேட்டை வட்டார துணை அலுவலர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்களிடம் குடிநீர் குழாயில் ஏற்பட்ட பகுதியை விரைவில் சரிசெய்து விடுவார்கள். உங்களுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்று கூறினார். அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com