அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஏரியூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Published on

ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூரில் உள்ள கொண்டஅள்ளி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதுவரை அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்கள் நியமிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதி கிராம மக்கள் சிலர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை உடனே நியமித்து மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com