வில்லியனூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் தற்கொலை

வில்லியனூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர் தற்கொலை
Published on

திருபுவனை:

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த பங்கனபள்ளி பகுதியை சேர்ந்தவர் ரூப்குமார் (வயது 46). டாக்டரான இவர் வில்லியனூர் அருகே அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் கடந்த 5 வருடங்களாக அங்குள்ள விடுதியில் தங்கி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி உஷாராணி திருப்பதியில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் ரூப்குமார் தங்கி இருந்த விடுதி அறை கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உதவி பேராசிரியர் ஜேம்ஸ் ராஜேஷ் விடுதி உதவியாளருடன் ரூப்குமார் தங்கி இருந்த விடுதி அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்த போது, ரூப்குமார் மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீ சில் புகார் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்தி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து ரூப்குமார் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com