

திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் டிரைவர்களாகவும், கண்டக்டர்களாகவும் 1,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் தனியார் பஸ் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாகவும். தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு நிவாரண உதவி வழங்கக்கோரி ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இதுவரை பெரும்பாலானோருக்கு நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்றும், இதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். அதில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதை யடுத்து ஒரு சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.