கைதி தப்பி ஓட்டம் - 3 போலீசார் சஸ்பெண்டு

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளைச்சிறைச்சாலையில் கைதி தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக 3 போலீசாரை சஸ்பெண்டு செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
கைதி தப்பி ஓட்டம் - 3 போலீசார் சஸ்பெண்டு
Published on

கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளைச்சிறைச்சாலையில் கைதி தியாகராஜ் (வயது 24) என்பவர் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி போலீசார் தணிக்கை மேற்கொண்டபோது தியாகராஜை காணவில்லை. அவர் சிறையில் இருந்து தப்பி ஓடியது தெரிய வந்தது. இதையொட்டி அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கூடலூர் புதிய பஸ்நிலையம் அருகே சுற்றித்திரிந்த தியாகராஜை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்து கைதி தப்பியது தொடர்பாக சிறைக்காவலர்கள் மலர், தினேஷ், ராஜேஷ் ஆகிய 3 பேரை சஸ்பெண்டு செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com