ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்த நிலையில் பாரத பிரதமர் மோடி ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

ஜி-7 மாநாடு வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காணொலி மூலம் தலைவர்கள் உரையாற்றுவார்கள். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பை தொடர்ந்து பாரத பிரதமர் மோடி ஜி-7 மாநாட்டில் 12-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ஆகிய தேதி நடைபெறும் அமர்வுகளில் பங்கேற்கிறார் என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது சீனாவில் சீனாவைச் சேர்ந்த நபர் இந்தியாவிற்கு வர தடை இல்லை. ஆனால், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சீனா செல்ல தடை உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த தடை தொடர்கிறது. சீன தூதரம் இந்த தடையை நீக்கி விரைவில் விசா கிடைக்க ஏற்பாடு செய்யும் என நம்புகிறோம்’’ என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com