கும்பகோணம் அருகே கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கும்பகோணம் அருகே வீட்டில் தனிமையில் இருந்த கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே திருநீலக்குடி, ஆண்டாளம் பேட்டை அறிவழகன், கூலி தொழிலாளி. இவரது மனைவி சிந்துஜா (வயது 26) இவர்களுக்கு திருமணமாகி 2 வருடமாகிறது. இந்த நிலையில் சிந்துஜா கர்ப்பிணிப் பெண்ணாக இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சிந்துஜா தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து திருநீலக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆனதால் கும்பகோணம் ஆர்டிஓ வீராச்சாமி தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com