

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரண்ணாய், 20-வது இடத்தில் இருக்கும் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா கிண்டிங்கை 21-13, 21-18 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பிரண்ணாய்க்கு 43 நிமிடங்கள் தேவைப்பட்டது. 2-வது சுற்றில் முதல்நிலை வீரரான மலேசியாவின் லீ சாங் வெய்-ஐ எதிர்கொள்கிறார்.
மற்றொரு போட்டியில் சிங்கப்பூர், தாய்லாந்து ஓபனை அடுத்தடுத்து வென்ற பி. சாய் பிரணீத் முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். கொரியாவைச் சேர்ந்த சன் வான் ஹோ-விட் 14-21, 18-21 என நேர்செட் கணக்கில் வீழ்ந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாட்விக்சைராஜ் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, அஸ்வினி பொண்ணப்பா - என். சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது.