

திருவள்ளூர்:
சென்னை ஆவடி அடுத்த ஆரிக்கபேடு பகுதியில் சசிகுமார் என்பவர் வீட்டில் வளர்த்த கோழியால் தொந்தரவு இருப்பதாக கூறி அன்பழகன் என்பவர் தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டதில் அன்பழகன் தாக்கியபோது கீழே விழுந்த சசிகுமார் உயிரிழந்துள்ளார்.
கோழி வளர்ப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.