போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ மீது வரி ஏய்ப்பு புகார்

ரொனால்டோ ஸ்பெயினில் சம்பாதித்த பணத்துக்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றும் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ மீது வரி ஏய்ப்பு புகார்
Published on

மாட்ரிட் :

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சம்பளம் மற்றும் விளம்பரம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். அவர் கிளப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடுகிறார்.

இதற்காக அவர் பெரும் தொகையை ஊதியமாக பெற்று வருகிறார். 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில் ரொனால்டோ ஸ்பெயினில் சம்பாதித்த பணத்துக்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றும் ரூ.102 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும் புகார்கள் கிளம்பின. இதனை ரொனால்டோ மறுத்தார்.

ஆனால் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவில் ஸ்பெயின் அரசு வக்கீல் அலுவலகம் சார்பில் ரொனால்டோ மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com