பொன்னேரியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

பொன்னேரி பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
பொன்னேரியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
Published on

பொன்னேரி:

பொன்னேரி பரஸ்மால் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்.

தேவம்பட்டில் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ந்தேதி பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றபோது காட்டாவூர் சாலை அருகே 2 மர்ம நபர்கள் விஜயகுமாரை வழி மறித்தனர்.

அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 3 பவுன் செயின் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சுப்பிரமணி, காட்டாவூர் குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com