ஜம்மு-காஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் போலீசார் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் போலீசார் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ளது காசிகுண்ட் பகுதி. இங்குள்ள ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனம் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட தொடங்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு போலீசாரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், ரோந்து சென்ற போலீசார் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com