கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டரிடம் ரகளை செய்த போலீஸ்காரர் சஸ்பெண்டு

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டரிடம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டரிடம் ரகளை செய்த போலீஸ்காரர் சஸ்பெண்டு
Published on

போரூர்:

சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா ஹசன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் நெற்குன்றம் சி.டி.என். நகரில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணி அளவில் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வரும் போலீஸ்காரர் இளங்கோவன் குடிபோதையில் மருத்துவமனைக்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனை டாக்டர் பாத்திமா ஹசன் தட்டிக் கேட்டார். அவரிடமும் போலீஸ்காரர் இளங்கோவன் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக பாத்திமா ஹசன் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜான் சுந்தர் மற்றும் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இணை ஆணையர் விஜயகுமாரி, குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் இளங்கோவனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com