ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்

மத உணர்வை புண்படுத்துவதாக அளித்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

காஞ்சிபுரம் நடைபெற்ற அத்திவரதர் வைபவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபர் ராமானுஜர் பேட்டி அளித்தார். இந்த பேட்டியின்போது அவர் மத உணர்வை புண்படுத்தும்படி பேசியதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சையது அலி என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் மனுவை பதிவு செய்த போலீசார், வரும் 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஜீயருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com