தொற்றில் இருந்து மீண்டாலும் கொரோனா அச்சத்தால் தவிக்கும் போலீசார்

கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும் போலீசார் மத்தியில் அதனால் உருவான பயத்தின் தாக்கம் குறையவில்லை.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் போலீசில் 350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்தனர். தற்போது வீட்டு கண்காணிப்பு, மருத்துவ விடுப்பில் இருப்போரும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்தவர்கள் மற்றும் இணைநோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள்.

கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும் போலீசார் மத்தியில் அதனால் உருவான பயத்தின் தாக்கம் குறையவில்லை. கொரோனா பாதித்த பல போலீசார் தங்கள் குடும்பம், குழந்தைகளை விட்டு பிரிந்து இருந்தனர். மீண்டும் உடல் நலம் தேறி பணிக்கு திரும்பும் போது அதன் அச்சம் தென்படுகிறது.

தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப்பணியாளராக பணிபுரியும் போலீசாரில் ஓய்வு வயதை நெருங்குபவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை போலீசார் மத்தியில் உள்ளது. ஆனாலும் கூட பல நேரங்களில் இதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் உள்ளது. மேலும் தங்கள் ஆற்றலுக்கு மீறி போலீசார் உழைக்க நேரிடுகிறது. இதனால் உடலாலும், மனதாலும் சோர்ந்துவிடுகின்றனர். அவர்களுக்கு புத்துணர்வு என்பது கிடைப்பதில்லை. எனவே போலீசாருக்கு  தேவையான உதவிகளை செய்ய வேண்டுமெனகோரிக்கை எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com