ஒரு வாரத்துக்கு பின்னர் தூத்துக்குடியில் போலீசார் எண்ணிக்கை குறைப்பு

தூத்துக்குடியில் முழு அளவில் சகஜ நிலை திரும்பியதாலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாலும் போலீஸ் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. #BanSterlite #SterliteProtest
ஒரு வாரத்துக்கு பின்னர் தூத்துக்குடியில் போலீசார் எண்ணிக்கை குறைப்பு
Published on

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பொதுமக்கள் இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டதுமே 21-ந்தேதி காலையில் இருந்தே தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து துப்பாகி சூடு, அதை தொடர்ந்து வன்முறை காரணமாக தூத்துக்குடிக்கு நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டனர்.

உச்சபட்சமாக 5 ஆயிரம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தார்கள். கமாண்டோ படையும் வரவழைக்கப்பட்டிருந்தது. மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் தூத்துக்குடியில் அமைதி திரும்பியது. முழுமையான அமைதி திரும்பும்வரை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், அதன்பின்னர் போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com