குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு- கோலம் வரைந்து போராட்டம் நடத்திய மாணவிகள் கைது

சென்னை பெசன்ட்நகரில் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.
கோலம் போடும் மாணவி
கோலம் போடும் மாணவி
Published on

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் வன்முறையாகவும் பல இடங்களில் வெடித்தது. இதனால் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். வன்முறை சம்பவங்களில் பலர் பலியாகினர்.

இந்நிலையில், சென்னை பெசன்ட்நகர் பகுதியில் மாணவியர் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து அங்கு வந்த அடையாறு சாஸ்திரி நகர் போலீசார் கோலம் வரைவதற்கு அனுமதி மறுத்தனர். ஆனாலும், சில மாணவிகள் அந்த இடத்தில் இருந்து நகரவில்லை.

இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரை கைதுசெய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  அதன்பின்னர், போலீசார் அவர்களை விடுவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com