உடுமலையில் வி‌ஷ புல் மேய்ந்து கர்ப்பிணி யானை பலி

வி‌ஷ புல் மேய்ந்து கர்ப்பிணி யானை இறந்தது. இந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலையில் வி‌ஷ புல் மேய்ந்து கர்ப்பிணி யானை பலி
Published on

உடுமலை:

உடுமலை மூணாறு ரோடு புங்கனோடை வனப்பகுதியில் 20 வயது கர்ப்பிணி யானை இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்டம் வன அலுவலர் பெரியசாமி, ரேஞ்சர் தங்கராஜ் பன்னீர்செல்வம், வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

வறட்சி காரணமாக யானைகள் மேயும் புற்கள் கருகி விட்டன. சில இடங்களில் இருக்கும் வி‌ஷபுற்களை மேய்ந்ததால் யானை இறந்திருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

கால்நடை டாக்டர் மனோகரன் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் யானை எப்படி இறந்தது என்ற விபரம் முழுவதும் தெரியவரும்.

தொடர்ந்து யானைகள் இறப்பது இந்த பகுதி வன உயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com