பெரியநாயக்கன்பாளையம் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜித்குமார் (வயது 20). மோட்டார் சைக்கிள் விற்பனை பிரதிநிதி.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவரை காதல் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்றார். போலீசில் புகார் செய்து பெற்றோர் மகளை மீட்டனர். ஆனால் மீண்டும் அஜித்குமார் அதே சிறுமியை கடத்திச்சென்றார். சிறுமியுடன் அஜித்குமார் குடும்பம் நடத்தினார். இதில் சிறுமி கர்ப்பமானார். தற்போது சிறுமிக்கு 5 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் குழந்தையுடன் சிறுமி பெற்றோர் வீட்டுக்கு வந்தார். மகளை மீட்ட பெற்றோர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com