தஞ்சையில் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க ஆர்ப்பாட்டம்

பா.ம.க. சார்பில் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சையில் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்:

மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி, மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கோபிசந்தர், மாவட்ட செயலாளர்கள் எஸ்.பி.குமார், எஸ்.வி.சங்கர், தியாகராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, தொழிற்சங்க இளைஞர்கள் கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒக்கி புயலில் மாயமானவர்களை காப்பாற்ற தவறியதை கண்டித்தும், மீட்கப்படாமல் உள்ள 500 மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க வலியுறுத்தியும், உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com