ஜல் ஜீவன் திட்டம் மூலம் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

ஜல் ஜீவன் இயக்கத்தின் செயலியை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி கடந்த 70 ஆண்டுகளில் செய்யாததை நாங்கள் 2 ஆண்டுகளில் முடித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

ஜல் ஜீவன் இயக்கத்தின் செயலியை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கவும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள், நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், மனிதநேயர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இங்குள்ள ஏழை மக்கள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆஸ்ரமங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் சுகாதாரமான குடிநீர் பெற உதவி செய்யலாம். இதற்காக ராஷ்ட்ரிய ஜல் ஜீவன் கோஷ் திட்டத்தையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.

ஜல்ஜீவன் இயக்கத்தின் ஒருபகுதியான கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம குடிநீர் மற்றும் துப்புறவுக் குழுவுடன்(வி.டபிள்யூ.எஸ்.சி) பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு குடிநீர் மட்டும் கிடைக்கவில்லை. கிராமங்கள், பெண்கள் என அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றதிலிருந்து 2019-ம் ஆண்டுவரை நாட்டில் 3 கோடி வீடுகளுக்குத்தான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஜல் ஜீவன் இயக்கம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டபின் 1.25 லட்சம் கிராமங்களில் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டில் 80 மாவட்டங்களில் உள்ள 1.25 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் 2 ஆண்டுகளில் முடித்துள்ளோம். குழாய் மூலம் குடிநீர் இணைப்பு 31 லட்சமாக இருந்தது, தற்போது 1.60 கோடியாக உயர்ந்துள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com