லக்னோவில் வாஜ்பாயின் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவச்சிலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
வாஜ்பாய் சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி
வாஜ்பாய் சிலையை திறந்துவைத்த பிரதமர் மோடி
Published on

லக்னோ:

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்த தினம் இன்று (புதன் கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. அலுவலகங்களில் வாஜ்பாய் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் நரேந்திரமோடி உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும், பா.ஜ.க. நிர்வாகிகளும் திரளாக சென்று மரியாதை செலுத்தினார்கள்.

37 வயதில் எம்.பி.யாக தேர்வான வாஜ்பாய் பாராளுமன்றத்துக்கு 9 தடவை தேர்வாகி எம்.பி.ஆக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தான் அதிக முறைகள் பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார். 

இதை நினைவு கூறும் விதமாக லக்னோவில் வாஜ்பாய்க்கு சுமார் 25 அடி உயரத்துக்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாஜ்பாய் சிலையை திறந்து வைக்கிறார்.

இதே விழாவில் லக்னோவில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேசம் மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com