பிரதமர் மோடி 3 நாள் பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட்டார்

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட்டார். #PMModi #MiddleEastVisit
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட்டார்
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட்டார்.

டெல்லியில் இருந்து இன்று தனி விமானம் மூலம் புறப்பட்ட மோடி ஜோர்டான் நாட்டுக்கு முதலில் செல்கிறார். அங்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லாவை சந்தித்து பேசுகிறார். அங்கிருந்து பாலஸ்தீனம் நாட்டுக்கு செல்கிறார். இதுவே அந்நாட்டுக்கு ஒரு இந்திய பிரதமரின் முதல் பயணமாகும். நாளை பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லாவை சந்தித்து பேசுகிறார். நாளை மாலையே அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்கிறார் மோடி. 

துபாயில் 11-ம் தேதி நடைபெற இருக்கும் ஆறாவது உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதன்பின்னர் அங்கு வசிக்கும் இந்திய மக்களை சந்தித்து பேசுகிறார். 

12-ம் தேதி துபாயிலிருந்து ஓமன் செல்லும் மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது ஓமன் நாட்டுக்கு அவரது முதல் பயணமாகும். அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லிக்கு வருகிறார். #PMModi #MiddleEastVisit #tamilnews 

X

Maalai Malar
www.maalaimalar.com