தற்கொலை
தற்கொலை

பிலிக்கல்பாளையம் அருகே விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை

பிலிக்கல்பாளையம் அருகே விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

பரமத்தி வேலூர்:

பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே சின்னமருதூரை சேர்ந்தவர் சுப்பண்ணன் (வயது 75), விவசாயி. இவரது மனைவி பாப்பாயி. மகன் கந்தசாமி. இந்நிலையில் சுப்பண்ணனுக்கும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் சுப்பண்ணன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுப்பண்ணன் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்ததை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் சுப்பண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com