பெரம்பூர் ஐ.சி.எப்.பில் மருந்து, செல்போன் கடையில் பணம்-பொருட்கள் கொள்ளை

பெரம்பூர் ஐ.சி.எப்.பில் மருந்து, செல்போன் கடையில் பணம்-பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைகளில் கொள்ளை
கடைகளில் கொள்ளை
Published on

அம்பத்தூர்:

கொளத்தூர் கம்பர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் இவர் ஐ.சி.எப். சிக்னல் அருகே மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்ற அவர் இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே ரூ. 5 ஆயிரம் ரொக்கம், லேப்டாப் மற்றும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் ஸ்ப்ரே போன்றவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இவரது கடையின் அருகே உள்ள நந்தகோபால் என்பவரின் செல்போன் கடை மற்றும் அதனருகே உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து செல்போன் ரூ.5 ஆயிரம், விளையாட்டு உபகரணங்கள், பேட், பந்து டீசர்ட் ,உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர்.

கொள்ளையர்கள் உருவம் பதிவாகாமல் இருக்க அந்தக் கடைகளில் இந்த சிசிடிவி கேமராவையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து ஐ.சி.எப் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com