

பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க.வினர் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை. காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கணபதி, கண்ணுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் வேணுராம் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் பஸ்சை பயன்படுத்தும் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பஸ்களை விட அரசு பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதில் சுடர்செல்வன், சங்கர், மேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews