பஸ் ஸ்டிரைக் எதிரொலி: நாய் பிடிக்கும் வண்டியில் பயணம் செய்யும் பொதுமக்கள்

தமிழகத்தில் பஸ் ஸ்டிரைக் நடப்பதால் சென்னை அரும்பாக்கத்தில் இருந்து கோயம்பேடுக்கு செல்லும் பொதுமக்கள் மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டியில் பயணம் செய்து வருகின்றனர்.
பஸ் ஸ்டிரைக் எதிரொலி: நாய் பிடிக்கும் வண்டியில் பயணம் செய்யும் பொதுமக்கள்
Published on

சென்னை:

ஊதிய உயர்வு, நிலுவைத்தொகையை வழங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8-வது நாளாக இன்று போராட்டம் நடந்து வரும் நிலையில், போதிய அளவில் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை வரும் ஞாயிறு அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். ஆனால், கோயம்பேடு செல்வதற்கு கூட பேருந்துகள் கிடைக்காத நிலை உள்ளது.

இந்நிலையில், அரும்பாக்கத்தில் இருந்து மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டிகளில் பொதுமக்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com