மயில் வேட்டையாடிய 2 பேர் கைது- துப்பாக்கிகள் பறிமுதல்

சாணார்பட்டி அருகே மயில் வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேட்டைக்கு பயன்படுத்திய 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மயில் வேட்டையாடியவர்கள் கைது
மயில் வேட்டையாடியவர்கள் கைது
Published on

கோபால்பட்டி:

சாணார்பட்டி அருகே உள்ள விராலிபட்டியை சேர்ந்தவர்கள் ஞானசேகர் (வயது 50), பவுல்ராஜ் (36). கூலித்தொழிலாளிகள். நேற்று இரவு இவர்கள், தங்களது வீட்டின் அருகே சுற்றித்திரிந்த ஒரு மயிலை துப்பாக்கி (ஏர்கன்) மூலம் சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமலை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் அங்கு மயில் இறைச்சியை சமைப்பதற்காக தயார் செய்து கொண்டிருந்த ஞானசேகர், பவுல்ராஜ் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ மயில் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மயில் வேட்டைக்கு பயன்படுத்திய 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com