நாலுமாவடியில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம்: மோகன் சி. லாசரஸ் பங்கேற்பு

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் மோகன் சி. லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாலுமாவடியில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம்: மோகன் சி. லாசரஸ் பங்கேற்பு
Published on

நாசரேத்:

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறப்பின் வாசல் ஜெபக்கூட்டம் நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர்.

இதில் காளையார் கோவில் ஜெபத் தோட்ட ஊழியங்களின் நிறுவனர் பெர்க்மான்ஸ் அடிகளார், இயேசு விடுவிக்கிறார் ஊழியர் அப்பாத்துரை ஆகியோர் தேவசெய்தி கொடுத்தனர். தேசத்தின் மக்களுக்காகவும், மழைக்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com