ஆரல்வாய்மொழி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

ஆரல்வாய்மொழி அருகே பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுமன்(வயது19). இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் அவரை வேலைக்குச் செல்ல பெற்றோர் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று பெற்றோர் அவரை வீட்டு தோட்டத்தில் பூ பறித்து வருமாறு கூறினார்கள். ஆனால் சுமன் பூபறிக்க செல்லவில்லை. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் சுமன் மனவேதனையுடன் காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். சுமன் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டில் இருந்த சுமன் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சுமனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுமன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சங்கரகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com