ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு: பன்னீர் செல்வம் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கப் போவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு: பன்னீர் செல்வம் அறிவிப்பு
Published on

சென்னை:

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. அறிவித்துள்ள வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஒருமனதாக ஆதரவு அளிக்கப் போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில்,ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன், எம்.பிக்கள் மைத்ரேயன், லட்சுமணன், எம்எல்ஏக்கள் செம்மலை, ஆறுகுட்டி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com