ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

பூமலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

மங்கலம்:

பூமலூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடுவேலம்பாளையம் பகுதிக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 22 நாட்களாக பூமலூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடுவேலம்பாளையம் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அருகே உள்ள கிராமங்களில் உள்ள கிணறுகளில் இருந்தும், ஆழ்குழாய் கிணறுகளுக்கு சென்றும் தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று பூமலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பூமலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அமர்ந்து சீரான குடிநீர் வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பூமலூர் ஊராட்சி மன்றத்தலைவர் பிரியங்கா மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நடுவேலம்பாளையம் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com