புதுவரவு: பட்ஜெட் விலையில் இரண்டு பானாசோனிக் ஸ்மார்ட்போன்கள்

பானாசோனிக் இந்தியா நிறுவனம் இரண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இவை பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவரவு: பட்ஜெட் விலையில் இரண்டு பானாசோனிக் ஸ்மார்ட்போன்கள்
Published on

புதுடெல்லி:

பானாசோனிக் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பானாசோனிக் எலுகா ரே ரூ.7,999 மற்றும் P85 ரூ.6,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என பானாசோனிக் இந்தியா தெரிவித்துள்ளது. 

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் மே 15-ந்தேதி முதல் இவற்றினஅ விற்பனை துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை பானாசோனிக் எலுகா ரே அர்போ எனும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம், 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு 4ஜி வோட்ல்இ வசதி மற்றும் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

பானாசோனிக் P85 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் டிஸ்ப்ளே, 1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

கனெக்டிவிட்டியை பொருத்த வரை டூயல் சிம் ஸ்லாட், வைபை, ப்ளூடூத் மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com