பள்ளிக்கரணை அருகே ஆக்கிரமித்து கட்டிய 10 கடைகள்-வீடு இடிப்பு

பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய 10 கடைகள் மற்றும் ஒரு வீட்டை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள்.
இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள்.
Published on

சோழிங்கநல்லூர்:

பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து 10 கடைகள், வீடு கட்டப்பட்டு இருந்தது.

இதனை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவில்லை.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற தாசில்தார் கல்யாணி தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

அவர்கள் ஆக்கிரமித்து கட்டி இருந்த 10 கடைகள், ஒரு வீட்டை இடித்து அகற்றினர். பள்ளிக்கரணை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com