பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது- பயணிகள் தவிப்பு

காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை திருச்சி அருகே தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #PallavanExpressDerailed
பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது- பயணிகள் தவிப்பு
Published on

திருச்சி:

காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி  ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயில் என்ஜின் திடீரென தடம் புரண்டது.

இன்று காலை 6.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் வரவேண்டிய பல்லவன் ரெயில் பொன்மலை அருகே உள்ள கிராப்பட்டியில் தடம்புரண்டு நின்றுவிட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் அங்கு சென்று என்ஜினை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும், பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. #PallavanExpressDerailed

X

Maalai Malar
www.maalaimalar.com